Posts

Showing posts from 2024

காவல்

 காவல் நிலையம் கரை வேட்டிக்கு  காவலர் கைகள் விரைவாக வணக்கம் முறையாக வைக்கும் நரை எட்டியவனை சிறை செல்ல திட்டி அறையோடு அவனை அறைக்கு அனுப்பும்.

தாய்-1

 தாயின் இறுதிக் கடன் ------------------------------------------ நடந்து போக நான் பிடிக்க நீட்டியவிரல் பசியாற பால் கொடுத்த தேகம் புசித்திட புகட்டிய பாகம் காலைக் கடனில் ஒன்றைக்  கழித்த குத்துக் கால்களும் இவன் அக்கம்பக்கம்  அலைந்திட வேண்டி குந்தியிருந்த கக்கமும்-நான் காயப்பட்டபோது கலங்கிய கண்களும் என்னைக்  கைக்குழந்தையாய் ஏந்தி  என் கன்னம் சாய்த்த கன்னங்களும் மகனை வாழ்த்திய வதனமும் துயில்மடிந்த மடியும்-இவை மொத்தமாய் மடிந்து மல்லாந்திருந்தாள் தீயின் பசிக்கு தாயைத் தந்தேன் திரும்பாதே என்ற தகவலுக்கு  தலைவணங்கி-நான் விரும்பிய வாழ்க்கையை  வழங்கியவளை விட்டுவிட்டு  வருந்திய படியே   வெறும் கையோடு  வீடு திரும்பினேன்..... சந்ததி காண சாம்பலைத் தின்றவள்-ஆண்டவன் சந்நிதி காண  சாம்பலாகிப் போனாள்.

கோணங்கித்தனம் அல்லது வறட்டு பிடிவாதம்

 கோணங்கித்தனம் ---------------------------------- நாய் வளர்த்தேன் பூனை வளர்த்தேன் நாளும் அதோடு அன்பை வளர்த்தேன் தாய் வெறுத்தேன் தந்தை வெறுத்தேன் தாங்கிப் பிடித்த பாசம் வெறுத்தேன் நாய் கடித்த காயம் மறந்தேன்  நானும் அதனை கொஞ்சி மகிழ்ந்தேன் பூனை கிழித்த கோபம் இல்லை பாலும் மோரும் பருகும் பிள்ளை அம்மை அடித்தாள் அன்பைக் கொடுத்தாள் அப்பன் அடித்தான் அறிவுரை கொடுத்தான் இருந்தும் இருவரை வெறுக்கலானேன் இறந்தும் இதுவரை இறுக்கமானேன் என்ன இந்த புத்தி?  என்னை அறுக்கும் கத்தி.

ஏகாதிபத்தியம்

 ஏகாதிபத்தியம் ---------------------------- அம்பலத்தில் ஆட்டுவிப்பவனே-சிவப்புக் கம்பளத்தில் கால் வைத்தாலும்-நீ மும்மலத்திலும் மூழ்கிக் கிடக்கின்றாய்-எவரும் அச்சத்தில்  அழுதிட வேண்டுமென்று உச்சத்தில் நின்று உலுப்புகிறாய் எச்சத்தில் ஏறித் தரித்தவனே-ஓர் கச்சமாய் காலம் கடத்து மிட்டா மிராசென்று மிரட்டுவாய் -யாரிடமும் கட்டாயக் கோபம் காட்டுவாய்-உன் அட்டாதுட்டிக்கு அளவில்லை கொட்டாவி விடும் கோட்டைக்காரா  கொட்டிக்கிடக்கும் காசாலே கொட்டம் உனக்கு-கடைசியில் ஒட்டி வைக்கும் ஒற்றை நாணயம் மட்டும் கணக்கு.

நான்

 நான் பழித்த பிறவியாய் கழித்த காலமுண்டு-என் காசில் கொழித்த காவல்துறை அழித்து ஆழியில் போட்டனர் அன்று அசடு வழிந்தபடி அகத்துக்குள் அழுதபடி ஆண்டுகள் போனது ஓடி தரமற்ற செயலில் திறங்காட்டி நின்றேன் வரம் பெற்ற நண்பர்கள் வரப்பெற்றதால் அறம் பேசி அன்பு காட்டி  ஆரமிட்டு அழகு பார்த்து சோரம் போகும் சொத்தையல்ல-நீ தீரம் காட்டத் தேர்ந்தவன் -என்றவரின் கரம் பற்றி கரையேறினேன்

உணவு

 உணவு ---------------- அக்கறையில் அடுக்களையில் ஆக்குவதில் அவசரத்தில்  உப்பில்லாத உணவுக்காக கொப்பளிக்கும் கோபம்-கரம் கூப்பி அழைத்த சாபம் பரிமாறிய தட்டை பறக்கவிட்ட பரிதாபப் பிறவியே உணவுக்காக உணவகம் போவோரே-நான் உரைப்பதை ஒரு கணம் கேளுங்கள் எச்சில் ஊறிய வகைகளில் எச்சரிக்கை தேவை வாய்க்கு ருசியாக விரும்புவதெல்லாம் வாய்க்கரிசியாக விழுவதுதான் நஞ்சு கலந்ததை நாவிற்கினிய நளபாகம் என்பார் சுடு சோறிலே சுண்ணாம்பு கலப்பார் சுவையான சாம்பாரிலே சூனியம் வைப்பார் கெட்டு அழுகிய காய்கறியை கேட்டு வாங்கி கூட்டு வகை முதலாளி தொழிலாளி முரணாலே கழுவாத பாத்திரத்தில் கொட்டி வைப்பார் ஆத்திரத்தில் இலையில் இடுவார் இவைகளை விலை கொடுத்து வாங்கியதால் வளைத்துக் கட்டி வயிறு கெட்டு அலைக்கழித்தால் ஆயுள் மட்டு  -ஆனால் உடையவள் உலையிலிடுவது உணவு அல்ல உணர்வு-உன்னை உயர்வாகக் கருதும் உறவு உனது ஆரோக்கியம் அவள் வைராக்கியம்.         கவிஞர்  செ.காமாட்சி சுந்தரம்

நல்லுலகம்

 நல்லுலகம்  ---------------------- நல்லவனாக நானிருந்தேன் நாடென்னை தழுவிக் கொண்டது நயவஞ்சகனாகி நானியிருந்தேன் நாடி அது நழுவ விட்டது உள்ளத்தில் உண்மையிருந்தது உடனிருப்பாரிடம் உரிமையிருந்தது கள்ளத்தனம் கறை படிந்தது கையெடுத்தோர் கம்பெடுத்தார் வில்லத்தனம் விளக்கொளியல்ல- அதை விட்ட தினம் விடிவெள்ளி போல வாய்மையுடன் வாழ்ந்திருந்தால்-நம்மை வறுமையிலும் வணங்கியிருப்பார்

தந்தை-1

 தந்தை ------------- கண்மூடிக் காணுகின்றேன் காலத்தைப் பின்னோக்கி  மண் மூடி மறைந்தவர்-இந்த மக்களைக் கண்டு மகிழ்ந்தவர் சுதந்திரம் தந்த சுந்தரர்  தந்திரம் அறியா தந்தையார் வேலை முடித்து  வீடு திரும்பும் வேளை தோழரோடு தேநீர் தேவையில்லை-தன்  பாலகரோடு பருகினால்  போதும் என்பார் சிறிய விசயமாக சிலருக்கு படலாம்- அதில் அரிய அப்பனின் அன்பை அறியலாம்-அப்படி நினைத்த நல்லவரின் நினைவு நாள் இன்று கால ஓட்டத்தில் காலனின்  கயமைத்தனம் கடந்து போனாலும அப்பாவை நினைவு கூறும்  அடியொத்த செயல்கள் எல்லோருக்கும் ஏதோவொன்று எப்போதும் இருக்கும் அப்போது அழுவோம்-நினைவை தப்பாமல் தழுவுவோம்.

இணையம்

 இணையம் --------------------- இணையத்து செய்தி இதயத்தை தொடுவதில்லை வாசித்த செய்திகளும் வசதிக்கு வரித்தனவே பயிற்றுவித்த பதிவும் உண்டு  பயமுறுத்திய பதிவும் உண்டு கற்றிடக் களமும் உண்டு காற்றில் கரைவதும் உண்டு பற்றுடன் பகிர்வோரும் உண்டு புற்றிலே பார்த்ததும் உண்டு  அன்னப்பறவை போல்  நீரை விலக்கி பாலைப் பருகி வாழும் உயிரினம் போல் நாளும் நாம் இருப்போம்

கவிதைகள்

கவிதைகள் ---------------------- என் கறை துடைக்கும் கைக்குட்டைகளே  எனை அக்கறையுடன் அரவணைக்கும் அன்னையாரே-நான் துவந்த தருணத்தில் தோழமையாக-மனம் உழண்ட போது உறக்கமாக  வெகுண்ட நேரத்தில் வாளாக-நா வறண்ட வேளை வான்மழையாகவும் வந்தாயே  அழுத சமயம் ஆறுதலாக அடுத்த நிமிடம் அன்புக்கரங்களாக மற்றவர் தவிர்த்த போது தாயாக  மனதில் தவித்த போது தாலாட்டாக என் உயிரோடு உலவிடும் நீ-நான் உயிர்விடும் வரை உடன் வர என்ன செய்ய வேண்டும்? உரைத்திடுவாய்.

Nature

 இயற்கை ------------------ இமைக்க இசைந்திடா இமயத்தின் இயல்பு   வர்ணிக்க முடியாத வர்ணங்கள்  வாசலுக்கு வராத வளமை வியப்பை வழங்கும் விருட்சம் ஏராளமான எண்ணங்களை  தாராளமாய் தருகின்றன இறைவன் தந்த இயற்கை இயங்கும் உலக இடுகை .

நண்பரைப் பற்றி

 வட்டாட்சியர் ----------------------- கற்றறிவை கடமைக்கு கொடுத்து பெற்றதை பிறருக்கு அளித்து-உனை பெற்றவரை புகழுக்கு அழைத்து மற்றவரை மகிழ்விக்கும் மனிதரே உற்றவன் உடன் இருக்க  உற்சவம் உனை ஈர்க்க  நற்செயல் நாளெல்லாம்  நடத்திட வற்றாத வளம் பெறுவீர் வட்டாட்சியர்🙏🙏🙏💐💐💐🤝

என் பிறப்பு

 என் பிறப்பு  --------------------- மன்னரும் மடிந்து போனார்-என்  முன்னோரும் முடியாமல் போனார்  இன்னபிறரும் இருந்ததில்லை-இந்த  ஈனனும் இடுகாடு செல்வான்-எனக்கு புண்ணியம் இல்லை புகழ்வதிலே  இன்னலும் இல்லை இகழ்வதிலே என்னவன் எனையறிவான்  ஏன் இவன் எனவும் தெளிவான்-என் கடமை கடவுள் அறிவான்-எனைக் கட்டமைத்து கதவையும் திறப்பான்  வந்த வேலை முடியவில்லை வகுத்த வழியும் மறக்கவில்லை தந்த உயிர் தயாளனிடமே தீர்ந்துவிடும் தேர்ந்தபடியே

விவசாயம்

 விவசாயம் -------------------- வாழும் காலத்தில் விசக்கசாயம் ஆனது விவசாயம் வரும் காலத்தில் வடித்த கஞ்சிக்கு  வடித்திடுவான் கண்ணீரை கெட்டும் பட்டணம் போனவனும்  கிட்டாத கஞ்சிக்காக கட்டாயம் கிராமம் வருவான் ஏறுமுகமாக இருந்தவனும் ஏரு பிடிப்பான் சோறுக்காக முதலாளி முள் வேலியாவான் பணக்காரன் பண்ணைக்காரனாவான்  ஆடம்பரம் ஆகும் உரம் பீதாம்பரம் உடுத்தியவனும் -ஒரு பருக்கைக்காக படுத்திடுவான் உழைத்து உணவு உண்ண கலப்பை காவல் கடவுளாக  நிலத்தை நம்புவான்-அந்த காலத்திற்காக காத்திருப்போம்

கிறுக்கல்கள்

 உறவுகளில் குறை எனும் கரை நீக்க  அக்கறை எனும் அன்பு நிறை அமைந்திருக்கிறதே பின் ஏன் பிடிவாதத் திரை-அதை பக்குவம் எனும் பந்தத்தீயிட்டு  பந்தத்தை பாதுகாப்பாய் அழகு ----‐------ ஆண்மையை வசீகரிக்கும் அண்மையில் அழைக்கும்-சமயத்தில் அடிமையாக்கி அழிக்கும்..

பிடிவாதம்

 பிடிவாதம் -----‐------------- முழுதும் நனைந்த பின் முக்காடிட்டு மறைக்கின்றார்-அந்த முட்டாள்தனத்தை முடிந்த வரை முயற்சிக்கின்றார்  அழுது அவர் நியாயம்  பழுதில்லை என பேசுகின்றார்-இவருக்கு விளக்கம் சொல்ல விருப்பமில்லை-எனக்கு விலகிச் செல்ல மறுப்பும் இல்லை.

தலைமுறை

 தலைமுறை ----------------------- தலைமுறை இடைவெளி   தவிர்க்க முடியாதது-அதற்கு  தலையை உருட்டி தவித்தல் ஆகாதது-இவர்கள் துயரை எறிந்து செயலை அறிந்து-தானே தயாராகிவிட்ட தங்கங்கள்-அவரிடம் நெருக்கடியின்றி நீங்கள் உரையாடினால்  சவுக்கடியாக பதிலுரைக்கும் சந்ததிகள் பொறுப்பை புரிந்து கொண்டு பிறப்பை போற்றுபவர்கள்  தெளிவாகத் தெரிகின்றார்-எதையும் எளிதாக ஏற்கின்றார்  பழி போட்டு இங்கு பயனில்லை புலி பாய்ச்சல் இது பூனையில்லை அடி வாங்கி அழுபவர்கள் அல்ல இடியாக இறங்கி இயங்குபவர்கள்-நம் பிடிவாதம் பொடியாக-ஒரு நாள் கொடியேற்றுவார் கோட்டையிலே.

தந்தையார்?

 தந்தை யார்? ----------------------- தகப்பன் தன்னை வருத்தி தேடியது தன் பிள்ளையின் அபிவிருத்தி. தொல்லை தரும் பிள்ளைக்காக  தலைகுனிய நேரும் பிழைக்காக மண் குடம் உடைக்க மடிந்திடும்-முன் மகனை மகுடம் சூட்டி மன்னனாக்கி மகிழ்ந்திருப்பான் வெற்றி விலாசமாகிட வெற்றிடம் வசமாவான்-நீ மேடையேறி மகிழ்ந்திருக்க  பாடையேறி படுத்திருப்பான்-நீ பட்டாடை போட்டிருக்க  பன்னாடையிடம் பாடுபட்டிருப்பான் அருமை மகனுக்காக  வலி தாங்கிய வழி கடந்து பெருமிதத்தால் விழியோரம் வழியும் நீருக்காக வாழ்ந்து வந்தவன் நீ நியமித்திடாத  உன் விளம்பர தூதுவன்-தன் சிறு வயது சேட்டைகளை  மறு வடிவில்  அருகிருந்து ஆனந்தப்படுபவன் பார்த்திராத பரமன் பாத்திரமாக பார் முன் அருளும் ஆண்டவனை அருகில் ஆண் மகனாய் சிலை நிலை சிவனை-நேரில் செயல் நிலை சிறந்தவனாய்

குடிகாரன்

 குடிகாரன் ------------------- குடித்து சீரழிந்தாய்  குடி கெடுத்து செயலிழந்தாய்  படித்தும் பயனில்லை  பிடித்த பேய் விடவில்லை நொடித்து நாளும் கெட்டாய்  நடித்து நாணயம் கேட்டாய் வெடிக்கும் வேதனையை-நெஞ்சில் அடித்து அழுகிறாள் வடித்த கண்ணீரை பிடித்தால் போகம் பாய்ச்சலாம் கை பிடித்த கணவனை காக்க  கால் பிடிக்கிறாள் கண்டவனை  காக்கா பிடிக்கிறாள்-ஆயினும் முடிந்தது முட்டாளின் மரணம் முடியாது மனைவியின் ரணம்.

இளங்கோவன்

 தம்பி இளங்கோவன் ------------------------------------ கூடா நட்பினால் கொடும் நோயினால்  கூடு பிரிந்து  காடு சென்றாய் தம்பீ.... வாடுகிறோம் வதங்குகிறோம் தேடுகிறோம் தென்படவில்லை திரும்பி வரமாட்டாயா? தம்பீ....செல்வன் வாரிசுகளின் வரிசையில்-ஒன்று வெற்றிடமானது வேதனையாகுதடா தம்பீ... பால்ய பருவத்தில் பேருந்திலேறி பறந்தாயே  கந்தர்வ கோட்டையில்  காணாமல் போக காட்டுக் குறிச்சியில்  கண்டெடுத்தோமே தம்பீ... உறவைத் தள்ளி உயிர்க் கொல்லி  உனை அள்ளிப் போனதடா  தம்பீ... வருடங்கள் உருண்டோடினாலும்  நெருடும் நினைவுகள் நீங்காதடா தம்பீ... அருளும் ஆண்டவன் கூட-இளங்கோவிற்கு  இருளும் இறைவனாகினான் தம்பீ...

வாக்குரிமை

 வாக்குரிமை ----------------------- அன்றாடம் காய்ச்சி அதை நம்பியே கட்சி இலவசம் காட்டிட இழிக்காதே  இருள் வசம் மாட்டி முழிக்காதே தேனெடுக்க தெரிந்தவன் புறங்கையில் பட்டதை புறக்கணிப்பானா? வாக்கு கேட்ட நாக்கால் நக்காமல் நீக்குவானா?-அவனிடம் பணம் வாங்கி பதவி ஏற்றினால்-உன்னை பிணம் ஆக்கி பாடை ஏற்றுவான்  குறுகிய சிந்தனையால் கருகி வெந்திடாதே வாக்குரிமை வக்கற்றவனுக்கு  வாய்த்த வாய்மை விரலில் இட்ட மை விரட்டட்டும் தீமை

E.V.G SIR

 E.V.G. SIR ---------------- ஆத்திரத்தை ஆயுதமாக்கி  அதனையே ஆதிக்கமாக்கி  பாத்திரத்தை பத்திரப்படுத்தி  புத்தி புகட்டுவார்  எள்ளி நகையாடுவோரை  சொல்லி அடிக்கும் சூரர்-சில நேரம் போராடித் தோற்றாலும்-அந்த போராளி தோற்றதில்லை-என்னுள்  தாக்கம் தந்ததை தவிர்ப்பதற்கில்லை  தேக்கம் நேர்ந்த நேரமெல்லாம் ஊக்கம் சார்ந்த உரையாடல் வீரமும்,விவேகமும் விளையாடியதால் வற்றிடாத வெற்றிகள் வரிசையாக வந்திடும் நம்பிக்கையின் முன்மாதிரி நடப்பிலும் முன்பு மாதிரி.              கவிஞர் செ.காமாட்சி சுந்தரம்

சிறிய கவிதைகள்

வாழ்க்கை ---‐----------‐----- ஆயுள் வடிவில் அன்னை மடியில் தீர்ந்தது  முடிவில் தென்னை மடியில்.  காமம்                                                                        -‐----------                                                                          கை வீச்சுக் காற்றில்  கரையும் தீ-சில நேரம்     கட்டுக்குள் வராமல்   காட்டுத் தீயாவதும் உண்டு.        வெற்றியாளன்                                                        ...

புனைப்பெயர்

 புனைப்பெயர் ------------‐---------‐- பட்டப் பெயரென்ன? பட்டயப் பெயரா? பார்த்து வளர்த்த பெற்றோர் இட்ட பெயரா? பணம் இருந்தென்ன  பாடை ஏறிய பின் பிணம் என்ற பெயர் உனக்கு பேரும் புகழும் பேசியென்ன  பின் நாளில் பேய் என்ற பெயரும் இருக்கு.

நான் மட்டும் தான்

 நான்மட்டும் தான் ------------------------------ செருக்கென்ற சுருக்கிட்டு  இருக்கின்ற வாழ்வை இறுக்கிக் கொல்லாதே பொருத்துப் புரிந்தோரை வெறுத்து விரட்டாதே திருந்தும் வழியில் திரும்பி வா -அதுதான் மருந்தாகும் மகிழ்ச்சிக்கு மறுப்பாயெனில்  முறுக்கும் மீசையை  நறுக்கும் நாள் வரும்.

Opening song

 பல்லவி வாட்டசாட்ட  வாலிபனே  வாட்டமென்ன வலியவனே  கூட்டம் கண்டு கலங்காதே  ஆட்டமாடு அதிரடியாய் கட்டம் போட்டு  திட்டம் போடும் நோட்டம் பார்த்து காட்டம் தீர்க்கும்  ஓங்கி அடிச்சா ஓட்டமெடுக்கும்  கூட்டம் கண்டு கலங்காதே ஆட்டமாடு அதிரடியாய் சரணம்-1 உதவும் இரக்கம்  உயரக்கதவு திறக்கும்  கடமை செய்ய  பெருமை வேண்டாம் கருணை கொள்ள  காலம் வேண்டாம் மடமைகள் மறித்து நிற்கும் -முடிவில் மகிமைகள் மதித்து ஏற்கும் போராடத் தயங்காதே புகழ் சேரும் மயங்காதே. சரணம்-2 நல்லதைச் செய்தால்  நாடும் உரைக்கும் நாயும் குரைக்கும்  கண்டதைத் திண்ணும் கழுதை உண்ட காகிதம் கருத்தும் இருக்கும் களவும்  இருக்கும் கொண்டதை சிறப்போடு  கொண்டாடு  பிறப்போடு.

நான்+1

 நான் ---------- நான் தேடிய வாழ்க்கை திருப்தியா? திரும்பிப் பார்க்கிறேன் விரக்தியே! நாடிய நல்லவை நொடியில் நழுவிடும்   நாசமற்றவை நாடித்துடிப்பில் நீடித்து நிற்கும்  கேலியும் கும்மாளம் கோடிட்ட வாழ்க்கை கேள்வியும் குழப்பமும் கூடிட்ட வாடிக்கை ஆதங்கம் குறைந்தபாடில்லை  ஆற்றாமை மறைந்தபாடில்லை- இருப்பினும் முயற்சியின் முதுகிலேறி  முதுமைக்குள் முடிசூட்டுவேன்.

பாடல்

 பல்லவி --------------- ஆரோக்கிய உணவு உண்ண  ஆயுள் அதிகம் ஆகுமடா  ஆசைப்பட்ட உணவு உண்ண அரிசி வாயில் விழுகுமடா நல்லதை திண்ணு  நடப்பதை எண்ணு சரணம்-1 -‐----------‐---- இனிக்கும் கனி என்றும் சனிக்கு சமமடா கசக்கும் காய்தானே  காயத்திற்கு காவலடா  சரணம்-2 ----------------- துவர்க்கும் துவையல்  தேகத்தை தாங்குமடா  புளிக்கும் பழமெல்லாம்  பிணிக்கு பொருத்தமடா.

நான்

 நான் ---------- எள்ளி நகையாடுவதால் என்னை தள்ளிவைக்கப் போவதில்லை தமிழ் சொல்லி அடிக்கும் சூரனிடம்  பள்ளிப் பையனின் பரிகாசம் கொல்லியிட காடு காணும் முன் மெல்லிசை மெட்டுக்கு அள்ளித் தருவேன் அமுதத் தமிழை மழைத்துளியால் மகிழும் மானாவாரி பனித்துளியால் பயனற்ற  பயிரல்ல.              கவிஞர் செ.காமாட்சி சுந்தரம்

சிறிய கவிதைகள்

பிடிவாதம் -----‐----------- முழுதும் நனைந்த பின்  முக்காடிட்டு மூடி மறைக்கின்றார்-அந்த முட்டாள்தனத்தை முடிந்த வரை முயற்சிக்கின்றார்  அழுது அவர் நியாயம்  பழுதில்லை என பேசுகின்றார்-இவருக்கு விளக்கம் சொல்ல விருப்பமில்லை-எனக்கு விலகிச் செல்ல மறுப்பும் இல்லை.  உறவுகள் ----------------- அள்ளிக் கொடுப்பாய்  அவன் அடுப்பு எரிய-அதில் கொள்ளி எடுப்பான் உன் கூடு எரிய.               கவிஞர் செ.காமாட்சி சுந்தரம்

பாகுபாடு

  பாகுபாடு அல்லும் பகலும் உழைக்கின்றார் அவனைப் புகழும் ஆளில்லை அரசியல் பக்கம் சாய்கின்றார் அதனைப் புகழா நாளில்லை இடியும்,மழையிலும் இறக்கின்றார் இரக்கம் காட்ட நபர் இல்லை இறைவன் போலப் பார்க்கின்றார் இயக்கும் நிலையில் நடப்பார் இல்லை கல்லும் மண்ணும் சுமக்கின்றார் கருணை காட்டும் கண்ணில்லை கதரில் ஆடை அணிகின்றார் கதறித் தலைவா என்கின்றார் குமுறிக் குமுறி கரைகின்றார் குரலைக் கேட்க காதில்லை கூட்டம் கூட்டிப் பேசுகின்றார் கொட்டம் போட்டு மகிழ்கின்றார் உழைப்பவனுக்கு உன் சீதனம் உண்மையில் உதாசீனம் உறிஞ்சுபவனுக்கு உண்டான உடமை மக்களிடம் மண்டிய மடமை. கவிஞர் செ.காமாட்சி சுந்தரம்

அற்புதமானவள்

 அற்புதமானவள் ----------------------------- ஆரம்பம் அன்னை ஆளுமையில் அங்கமானவள்  ஆரமிட்டு அகத்தலைவி  ஆண்மையை அங்கீகரித்தவள்  ஆரத்தழுவிட அரும்புதல்வி ஆற்றாமைக்கு ஆறுதலானவள்  ஆரவாரமானவள் பெண் பிறவி ஆண்டவன் அளித்த உறவில்.

வாழ்க்கை

  வாழ்க்கை/ கவிஞர் / அறிமுகம் ——————– நெருப்புக் கோளத்தில் பூமி பிறந்தது நீர்க் குவளையில் நாம் பிறந்தோம் வாயுவால் வாழ்ந்தோம் ஆகாயம் தந்த ஆதாயமாக நிலம் கண்டது நீரினை வளம்கண்ட தாவரங்கள் வாழ்வாதாரமானது உண்டோம் உடுத்தினோம் உலகைச் சுற்றினோம் உடமைக்காக கடமையாற்றினோம் இணையென்று இன்னோர் உயிரைப் பிணைத்துக் கொண்டோம் பிள்ளைகள் பிறந்தது மழலைகளாக மலர்ந்தவர்கள் மறுசுழற்சியின் மகிழ்வாக மாலைகள் சூடிட மணமாகினர் பேரப்பிள்ளைகள் பிறந்தன பேர் உவகைப் பேணிணோம் பேரம் பேசியபடி படைத்தவன் பறித்துக் கொண்டான் பகிர்ந்தவர்கள் பதறிக் கதறினர் மடிந்தான் மனிதன் முடிந்தன முறையாய். கவிஞர் செ.காமாட்சி சுந்தரம்./

வெற்றியாளன்

Image
  Menu   Home கவிதைகள் வெற்றியாளன் வெற்றியாளன் கவிதைகள் தமிழ் நாடு   Uma Kanthan  March 1, 2024   0  10 1 minute read வெற்றியாளன் தோல்வியை தோளில் போடாதே துவண்டதை துளிர்க்க விடாதே கிளை ஒன்று கருகிச் சருகாகலாம் நிலை அதுவல்ல மலை போல மரம் இருக்கும் ஒடிந்து விடும் முருங்கையல்ல-நீ இடி விழுந்தாலும் எரிந்திடாத இரும்புத் தூண்-மனதில் படிந்த பேரிழப்பால் கடிந்திடலாம் காண்போரை நொடித்தவர்க்கு ஒவ்வொரு நொடியும் நெடியேறுவது நடக்கும் அடியோடு அதை மறந்து முடிந்த வரை முயற்சித்து-மறுபடியும் மடியும் முன் மகுடம்சூடி கொடி உறவுக்காரிக்கு கோடிப் பெருமைகள் கூடிவரத் தேடிடுவீர் நாடி அடங்கும் முன் நாடியதை நடத்திடுவீர்

தாய் மொழி

  தாய் மொழி ---------------------- கைகளின் சைகைகளிலே  கண்டிருந்த வாழ்க்கையிலே  ஒலி கொண்டு மொழி கண்டு வழி உண்டானது வளர்கையிலே  புரிதலுக்கு பயன்பட்டது-பின் நெறிப்படுத்த பண்பட்டது இலக்கணம் கருவாக -அதில் இலக்கியம் உருவானது பொழியும் புலமையோர்  எழிலாக ஏட்டினிலே  தொழிலாக்கி தொட்டனர்  அழியாத ஆளுமையை மொழியாலே முடியுமென  வழிகாட்டி வைத்தனர் அன்றுமுதல் இன்றுவரை உலக மொழியில் உயர்ந்த மொழியாய் தமிழ்மொழியை முன்மொழிந்த வள்ளுவனும் வாழ்வது எழுத்தாணியால் எழுதிய  தாய் மொழியாலே.

ஒன்றாக வாழ்வது (Living together )

 ஒன்றாக வாழ்வது (Living together ) ---------------------------‐------ இலை மறை காய் மறையாய் இருந்தது வரையறை தாண்டியே வளருது பரம்பரை பெருமை பேசியது பம்பரச் சுழலாய் போனது கலவரம் ஆனது கலாச்சாரம் -இந்த  நிலவரம் நீளும் நிலைவரும்  புரிதல் பெயரிலே புதைத்தல்-இதை பரிந்து பேசுவது படித்தல் இச்சை இங்கே கொச்சையானது-இந்த  இம்சை இங்கே இசைதலானது.

காதல் துரோகிகள்

 காதல் துரோகிகள்  ----------------------------------- ஆண்:-  நஞ்சை நாவில் தடவி நெஞ்சில் நிறைந்திருப்பான்  மஞ்சத்தில் மகிழ்ந்ததும்  வஞ்சித்து விடை பெறுவான்  பெண்:- வேசத்தில் வெற்றிபெற  பாசத்தை பற்றிடுவாள்  வேண்டியதை வசமாக்கி  வேதனை தர விசமாகிடுவாள்.