தாய் மொழி
தாய் மொழி ---------------------- கைகளின் சைகைகளிலே கண்டிருந்த வாழ்க்கையிலே ஒலி கொண்டு மொழி கண்டு வழி உண்டானது வளர்கையிலே புரிதலுக்கு பயன்பட்டது-பின் நெறிப்படுத்த பண்பட்டது இலக்கணம் கருவாக -அதில் இலக்கியம் உருவானது பொழியும் புலமையோர் எழிலாக ஏட்டினிலே தொழிலாக்கி தொட்டனர் அழியாத ஆளுமையை மொழியாலே முடியுமென வழிகாட்டி வைத்தனர் அன்றுமுதல் இன்றுவரை உலக மொழியில் உயர்ந்த மொழியாய் தமிழ்மொழியை முன்மொழிந்த வள்ளுவனும் வாழ்வது எழுத்தாணியால் எழுதிய தாய் மொழியாலே.