E.V.G. SIR ---------------- ஆத்திரத்தை ஆயுதமாக்கி அதனையே ஆதிக்கமாக்கி பாத்திரத்தை பத்திரப்படுத்தி புத்தி புகட்டுவார் எள்ளி நகையாடுவோரை சொல்லி அடிக்கும் சூரர்-சில நேரம் போராடித் தோற்றாலும்-அந்த போராளி தோற்றதில்லை-என்னுள் தாக்கம் தந்ததை தவிர்ப்பதற்கில்லை தேக்கம் நேர்ந்த நேரமெல்லாம் ஊக்கம் சார்ந்த உரையாடல் வீரமும்,விவேகமும் விளையாடியதால் வற்றிடாத வெற்றிகள் வரிசையாக வந்திடும் நம்பிக்கையின் முன்மாதிரி நடப்பிலும் முன்பு மாதிரி. கவிஞர் செ.காமாட்சி சுந்தரம்