நல்லுலகம்
நல்லுலகம்
----------------------
நல்லவனாக நானிருந்தேன்
நாடென்னை தழுவிக் கொண்டது
நயவஞ்சகனாகி நானியிருந்தேன்
நாடி அது நழுவ விட்டது
உள்ளத்தில் உண்மையிருந்தது
உடனிருப்பாரிடம் உரிமையிருந்தது
கள்ளத்தனம் கறை படிந்தது
கையெடுத்தோர் கம்பெடுத்தார்
வில்லத்தனம் விளக்கொளியல்ல- அதை
விட்ட தினம் விடிவெள்ளி போல
வாய்மையுடன் வாழ்ந்திருந்தால்-நம்மை
வறுமையிலும் வணங்கியிருப்பார்
Comments
Post a Comment