தந்தை-1
தந்தை
-------------
கண்மூடிக் காணுகின்றேன்
காலத்தைப் பின்னோக்கி
மண் மூடி மறைந்தவர்-இந்த
மக்களைக் கண்டு மகிழ்ந்தவர்
சுதந்திரம் தந்த சுந்தரர்
தந்திரம் அறியா தந்தையார்
வேலை முடித்து வீடு திரும்பும் வேளை
தோழரோடு தேநீர் தேவையில்லை-தன்
பாலகரோடு பருகினால் போதும் என்பார்
சிறிய விசயமாக
சிலருக்கு படலாம்- அதில்
அரிய அப்பனின்
அன்பை அறியலாம்-அப்படி
நினைத்த நல்லவரின்
நினைவு நாள் இன்று
கால ஓட்டத்தில் காலனின்
கயமைத்தனம் கடந்து போனாலும
அப்பாவை நினைவு கூறும்
அடியொத்த செயல்கள்
எல்லோருக்கும் ஏதோவொன்று
எப்போதும் இருக்கும்
அப்போது அழுவோம்-நினைவை
தப்பாமல் தழுவுவோம்.
Comments
Post a Comment