தாயின் இறுதிக் கடன் ------------------------------------------ நடந்து போக நான் பிடிக்க நீட்டியவிரல் பசியாற பால் கொடுத்த தேகம் புசித்திட புகட்டிய பாகம் காலைக் கடனில் ஒன்றைக் கழித்த குத்துக் கால்களும் இவன் அக்கம்பக்கம் அலைந்திட வேண்டி குந்தியிருந்த கக்கமும்-நான் காயப்பட்டபோது கலங்கிய கண்களும் என்னைக் கைக்குழந்தையாய் ஏந்தி என் கன்னம் சாய்த்த கன்னங்களும் மகனை வாழ்த்திய வதனமும் துயில்மடிந்த மடியும்-இவை மொத்தமாய் மடிந்து மல்லாந்திருந்தாள் தீயின் பசிக்கு தாயைத் தந்தேன் திரும்பாதே என்ற தகவலுக்கு தலைவணங்கி-நான் விரும்பிய வாழ்க்கையை வழங்கியவளை விட்டுவிட்டு வருந்திய படியே வெறும் கையோடு வீடு திரும்பினேன்..... சந்ததி காண சாம்பலைத் தின்றவள்-ஆண்டவன் சந்நிதி காண சாம்பலாகிப் போனாள்.