நல்லுலகம்
நல்லுலகம் ---------------------- நல்லவனாக நானிருந்தேன் நாடென்னை தழுவிக் கொண்டது நயவஞ்சகனாகி நானியிருந்தேன் நாடி அது நழுவ விட்டது உள்ளத்தில் உண்மையிருந்தது உடனிருப்பாரிடம் உரிமையிருந்தது கள்ளத்தனம் கறை படிந்தது கையெடுத்தோர் கம்பெடுத்தார் வில்லத்தனம் விளக்கொளியல்ல- அதை விட்ட தினம் விடிவெள்ளி போல வாய்மையுடன் வாழ்ந்திருந்தால்-நம்மை வறுமையிலும் வணங்கியிருப்பார்