Posts

Showing posts from August, 2024

நான்

 நான் பழித்த பிறவியாய் கழித்த காலமுண்டு-என் காசில் கொழித்த காவல்துறை அழித்து ஆழியில் போட்டனர் அன்று அசடு வழிந்தபடி அகத்துக்குள் அழுதபடி ஆண்டுகள் போனது ஓடி தரமற்ற செயலில் திறங்காட்டி நின்றேன் வரம் பெற்ற நண்பர்கள் வரப்பெற்றதால் அறம் பேசி அன்பு காட்டி  ஆரமிட்டு அழகு பார்த்து சோரம் போகும் சொத்தையல்ல-நீ தீரம் காட்டத் தேர்ந்தவன் -என்றவரின் கரம் பற்றி கரையேறினேன்

உணவு

 உணவு ---------------- அக்கறையில் அடுக்களையில் ஆக்குவதில் அவசரத்தில்  உப்பில்லாத உணவுக்காக கொப்பளிக்கும் கோபம்-கரம் கூப்பி அழைத்த சாபம் பரிமாறிய தட்டை பறக்கவிட்ட பரிதாபப் பிறவியே உணவுக்காக உணவகம் போவோரே-நான் உரைப்பதை ஒரு கணம் கேளுங்கள் எச்சில் ஊறிய வகைகளில் எச்சரிக்கை தேவை வாய்க்கு ருசியாக விரும்புவதெல்லாம் வாய்க்கரிசியாக விழுவதுதான் நஞ்சு கலந்ததை நாவிற்கினிய நளபாகம் என்பார் சுடு சோறிலே சுண்ணாம்பு கலப்பார் சுவையான சாம்பாரிலே சூனியம் வைப்பார் கெட்டு அழுகிய காய்கறியை கேட்டு வாங்கி கூட்டு வகை முதலாளி தொழிலாளி முரணாலே கழுவாத பாத்திரத்தில் கொட்டி வைப்பார் ஆத்திரத்தில் இலையில் இடுவார் இவைகளை விலை கொடுத்து வாங்கியதால் வளைத்துக் கட்டி வயிறு கெட்டு அலைக்கழித்தால் ஆயுள் மட்டு  -ஆனால் உடையவள் உலையிலிடுவது உணவு அல்ல உணர்வு-உன்னை உயர்வாகக் கருதும் உறவு உனது ஆரோக்கியம் அவள் வைராக்கியம்.         கவிஞர்  செ.காமாட்சி சுந்தரம்