நான்
நான்
பழித்த பிறவியாய்
கழித்த காலமுண்டு-என் காசில்
கொழித்த காவல்துறை
அழித்து ஆழியில் போட்டனர் அன்று
அசடு வழிந்தபடி அகத்துக்குள் அழுதபடி
ஆண்டுகள் போனது ஓடி
தரமற்ற செயலில்
திறங்காட்டி நின்றேன்
வரம் பெற்ற நண்பர்கள் வரப்பெற்றதால்
அறம் பேசி அன்பு காட்டி
ஆரமிட்டு அழகு பார்த்து
சோரம் போகும் சொத்தையல்ல-நீ
தீரம் காட்டத் தேர்ந்தவன்
-என்றவரின்
கரம் பற்றி கரையேறினேன்
Comments
Post a Comment