ஏகாதிபத்தியம்
ஏகாதிபத்தியம்
----------------------------
அம்பலத்தில் ஆட்டுவிப்பவனே-சிவப்புக்
கம்பளத்தில் கால் வைத்தாலும்-நீ
மும்மலத்திலும் மூழ்கிக் கிடக்கின்றாய்-எவரும்
அச்சத்தில் அழுதிட வேண்டுமென்று
உச்சத்தில் நின்று உலுப்புகிறாய்
எச்சத்தில் ஏறித் தரித்தவனே-ஓர்
கச்சமாய் காலம் கடத்து
மிட்டா மிராசென்று மிரட்டுவாய்
-யாரிடமும்
கட்டாயக் கோபம் காட்டுவாய்-உன்
அட்டாதுட்டிக்கு அளவில்லை
கொட்டாவி விடும் கோட்டைக்காரா
கொட்டிக்கிடக்கும் காசாலே கொட்டம் உனக்கு-கடைசியில்
ஒட்டி வைக்கும் ஒற்றை நாணயம் மட்டும் கணக்கு.
Comments
Post a Comment