கோணங்கித்தனம் அல்லது வறட்டு பிடிவாதம்

 கோணங்கித்தனம்

----------------------------------

நாய் வளர்த்தேன் பூனை வளர்த்தேன்

நாளும் அதோடு அன்பை வளர்த்தேன்

தாய் வெறுத்தேன் தந்தை வெறுத்தேன்

தாங்கிப் பிடித்த பாசம் வெறுத்தேன்

நாய் கடித்த காயம் மறந்தேன் 

நானும் அதனை கொஞ்சி மகிழ்ந்தேன்

பூனை கிழித்த கோபம் இல்லை

பாலும் மோரும் பருகும் பிள்ளை

அம்மை அடித்தாள் அன்பைக் கொடுத்தாள்

அப்பன் அடித்தான் அறிவுரை கொடுத்தான்

இருந்தும் இருவரை வெறுக்கலானேன்

இறந்தும் இதுவரை இறுக்கமானேன்

என்ன இந்த புத்தி? 

என்னை அறுக்கும் கத்தி.

Comments

Popular posts from this blog

தாய் மொழி

காதல் துரோகிகள்

பாகுபாடு