கவிதைகள்
கவிதைகள்
----------------------
என் கறை துடைக்கும் கைக்குட்டைகளே
எனை அக்கறையுடன் அரவணைக்கும் அன்னையாரே-நான்
துவந்த தருணத்தில் தோழமையாக-மனம்
உழண்ட போது உறக்கமாக
வெகுண்ட நேரத்தில் வாளாக-நா
வறண்ட வேளை வான்மழையாகவும் வந்தாயே
அழுத சமயம் ஆறுதலாக
அடுத்த நிமிடம் அன்புக்கரங்களாக
மற்றவர் தவிர்த்த போது தாயாக
மனதில் தவித்த போது தாலாட்டாக
என் உயிரோடு உலவிடும் நீ-நான்
உயிர்விடும் வரை உடன் வர
என்ன செய்ய வேண்டும்? உரைத்திடுவாய்.
Comments
Post a Comment