வாக்குரிமை

 வாக்குரிமை

-----------------------

அன்றாடம் காய்ச்சி

அதை நம்பியே கட்சி

இலவசம் காட்டிட இழிக்காதே 

இருள் வசம் மாட்டி முழிக்காதே

தேனெடுக்க தெரிந்தவன்

புறங்கையில் பட்டதை புறக்கணிப்பானா?

வாக்கு கேட்ட நாக்கால்

நக்காமல் நீக்குவானா?-அவனிடம்

பணம் வாங்கி பதவி ஏற்றினால்-உன்னை

பிணம் ஆக்கி பாடை ஏற்றுவான் 

குறுகிய சிந்தனையால்

கருகி வெந்திடாதே

வாக்குரிமை வக்கற்றவனுக்கு 

வாய்த்த வாய்மை

விரலில் இட்ட மை

விரட்டட்டும் தீமை

Comments

Popular posts from this blog

தாய் மொழி

காதல் துரோகிகள்

பாகுபாடு