குடிகாரன்
குடிகாரன்
-------------------
குடித்து சீரழிந்தாய்
குடி கெடுத்து செயலிழந்தாய்
படித்தும் பயனில்லை
பிடித்த பேய் விடவில்லை
நொடித்து நாளும் கெட்டாய்
நடித்து நாணயம் கேட்டாய்
வெடிக்கும் வேதனையை-நெஞ்சில்
அடித்து அழுகிறாள்
வடித்த கண்ணீரை
பிடித்தால் போகம் பாய்ச்சலாம்
கை பிடித்த கணவனை காக்க
கால் பிடிக்கிறாள் கண்டவனை
காக்கா பிடிக்கிறாள்-ஆயினும்
முடிந்தது முட்டாளின் மரணம்
முடியாது மனைவியின் ரணம்.
Comments
Post a Comment