E.V.G SIR
E.V.G. SIR
----------------
ஆத்திரத்தை ஆயுதமாக்கி
அதனையே ஆதிக்கமாக்கி
பாத்திரத்தை பத்திரப்படுத்தி
புத்தி புகட்டுவார்
எள்ளி நகையாடுவோரை
சொல்லி அடிக்கும் சூரர்-சில நேரம்
போராடித் தோற்றாலும்-அந்த
போராளி தோற்றதில்லை-என்னுள்
தாக்கம் தந்ததை தவிர்ப்பதற்கில்லை
தேக்கம் நேர்ந்த நேரமெல்லாம்
ஊக்கம் சார்ந்த உரையாடல்
வீரமும்,விவேகமும் விளையாடியதால்
வற்றிடாத வெற்றிகள்
வரிசையாக வந்திடும்
நம்பிக்கையின் முன்மாதிரி
நடப்பிலும் முன்பு மாதிரி.
கவிஞர்
செ.காமாட்சி சுந்தரம்
Comments
Post a Comment