Opening song
பல்லவி
வாட்டசாட்ட வாலிபனே
வாட்டமென்ன வலியவனே
கூட்டம் கண்டு கலங்காதே
ஆட்டமாடு அதிரடியாய்
கட்டம் போட்டு
திட்டம் போடும்
நோட்டம் பார்த்து
காட்டம் தீர்க்கும்
ஓங்கி அடிச்சா ஓட்டமெடுக்கும்
கூட்டம் கண்டு கலங்காதே
ஆட்டமாடு அதிரடியாய்
சரணம்-1
உதவும் இரக்கம்
உயரக்கதவு திறக்கும்
கடமை செய்ய
பெருமை வேண்டாம்
கருணை கொள்ள
காலம் வேண்டாம்
மடமைகள் மறித்து நிற்கும் -முடிவில்
மகிமைகள் மதித்து ஏற்கும்
போராடத் தயங்காதே
புகழ் சேரும் மயங்காதே.
சரணம்-2
நல்லதைச் செய்தால்
நாடும் உரைக்கும்
நாயும் குரைக்கும்
கண்டதைத் திண்ணும் கழுதை
உண்ட காகிதம்
கருத்தும் இருக்கும்
களவும் இருக்கும்
கொண்டதை சிறப்போடு
கொண்டாடு
பிறப்போடு.
Comments
Post a Comment