சிறிய கவிதைகள்
பிடிவாதம்
-----‐-----------
முழுதும் நனைந்த பின்
முக்காடிட்டு மூடி மறைக்கின்றார்-அந்த முட்டாள்தனத்தை முடிந்த வரை முயற்சிக்கின்றார்
அழுது அவர் நியாயம்
பழுதில்லை என பேசுகின்றார்-இவருக்கு
விளக்கம் சொல்ல விருப்பமில்லை-எனக்கு
விலகிச் செல்ல மறுப்பும் இல்லை.
உறவுகள்
-----------------
அள்ளிக் கொடுப்பாய்
அவன் அடுப்பு எரிய-அதில்
கொள்ளி எடுப்பான்
உன் கூடு எரிய.
கவிஞர்
செ.காமாட்சி சுந்தரம்
Comments
Post a Comment