இளங்கோவன்
தம்பி இளங்கோவன்
------------------------------------
கூடா நட்பினால்
கொடும் நோயினால்
கூடு பிரிந்து
காடு சென்றாய் தம்பீ....
வாடுகிறோம் வதங்குகிறோம்
தேடுகிறோம்
தென்படவில்லை
திரும்பி வரமாட்டாயா? தம்பீ....செல்வன்
வாரிசுகளின் வரிசையில்-ஒன்று
வெற்றிடமானது வேதனையாகுதடா தம்பீ...
பால்ய பருவத்தில்
பேருந்திலேறி பறந்தாயே
கந்தர்வ கோட்டையில்
காணாமல் போக
காட்டுக் குறிச்சியில்
கண்டெடுத்தோமே தம்பீ...
உறவைத் தள்ளி
உயிர்க் கொல்லி
உனை அள்ளிப் போனதடா
தம்பீ...
வருடங்கள் உருண்டோடினாலும்
நெருடும் நினைவுகள்
நீங்காதடா தம்பீ...
அருளும் ஆண்டவன் கூட-இளங்கோவிற்கு
இருளும் இறைவனாகினான் தம்பீ...
Comments
Post a Comment