தலைமுறை

 தலைமுறை

-----------------------

தலைமுறை இடைவெளி  

தவிர்க்க முடியாதது-அதற்கு 

தலையை உருட்டி

தவித்தல் ஆகாதது-இவர்கள்

துயரை எறிந்து

செயலை அறிந்து-தானே

தயாராகிவிட்ட தங்கங்கள்-அவரிடம்

நெருக்கடியின்றி நீங்கள் உரையாடினால் 

சவுக்கடியாக பதிலுரைக்கும் சந்ததிகள்

பொறுப்பை புரிந்து கொண்டு

பிறப்பை போற்றுபவர்கள் 

தெளிவாகத் தெரிகின்றார்-எதையும்

எளிதாக ஏற்கின்றார் 

பழி போட்டு இங்கு பயனில்லை

புலி பாய்ச்சல் இது பூனையில்லை

அடி வாங்கி அழுபவர்கள் அல்ல

இடியாக இறங்கி இயங்குபவர்கள்-நம்

பிடிவாதம் பொடியாக-ஒரு நாள்

கொடியேற்றுவார் கோட்டையிலே.

Comments

Popular posts from this blog

தாய் மொழி

காதல் துரோகிகள்

பாகுபாடு