என் பிறப்பு

 என் பிறப்பு 

---------------------

மன்னரும் மடிந்து போனார்-என் 

முன்னோரும் முடியாமல் போனார் 

இன்னபிறரும் இருந்ததில்லை-இந்த 

ஈனனும் இடுகாடு செல்வான்-எனக்கு

புண்ணியம் இல்லை புகழ்வதிலே 

இன்னலும் இல்லை இகழ்வதிலே

என்னவன் எனையறிவான் 

ஏன் இவன் எனவும் தெளிவான்-என்

கடமை கடவுள் அறிவான்-எனைக்

கட்டமைத்து கதவையும் திறப்பான் 

வந்த வேலை முடியவில்லை

வகுத்த வழியும் மறக்கவில்லை

தந்த உயிர் தயாளனிடமே

தீர்ந்துவிடும் தேர்ந்தபடியே

Comments