ஒன்றாக வாழ்வது (Living together )

 ஒன்றாக வாழ்வது

(Living together )

---------------------------‐------

இலை மறை

காய் மறையாய் இருந்தது

வரையறை தாண்டியே வளருது

பரம்பரை பெருமை பேசியது

பம்பரச் சுழலாய் போனது

கலவரம் ஆனது கலாச்சாரம் -இந்த 

நிலவரம் நீளும் நிலைவரும் 

புரிதல் பெயரிலே புதைத்தல்-இதை

பரிந்து பேசுவது படித்தல்

இச்சை இங்கே கொச்சையானது-இந்த 

இம்சை இங்கே இசைதலானது.

Comments

Popular posts from this blog

தாய் மொழி

காதல் துரோகிகள்

பாகுபாடு