தாய் மொழி

 

தாய் மொழி

----------------------

கைகளின் சைகைகளிலே 

கண்டிருந்த வாழ்க்கையிலே 

ஒலி கொண்டு மொழி கண்டு

வழி உண்டானது வளர்கையிலே 

புரிதலுக்கு பயன்பட்டது-பின்

நெறிப்படுத்த பண்பட்டது

இலக்கணம் கருவாக -அதில்

இலக்கியம் உருவானது

பொழியும் புலமையோர் 

எழிலாக ஏட்டினிலே 

தொழிலாக்கி தொட்டனர் 

அழியாத ஆளுமையை

மொழியாலே முடியுமென 

வழிகாட்டி வைத்தனர்

அன்றுமுதல் இன்றுவரை

உலக மொழியில்

உயர்ந்த மொழியாய்

தமிழ்மொழியை முன்மொழிந்த

வள்ளுவனும் வாழ்வது

எழுத்தாணியால் எழுதிய 

தாய் மொழியாலே.

Comments

  1. மிகவும் அற்புதம் சார் பாராட்டுக்கள் 👏👏👏👏

    ReplyDelete
  2. தமிழ் அமுதம் பருகி தாளாத இன்பம் கொண்டேன் 🌈 💥

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

காதல் துரோகிகள்

பாகுபாடு